ஒவ்வொரு மகனுக்கும் அவரின் அப்பாதான் முதல் ஹீரோ. குழந்தை பருவத்திலிருந்தே அப்பாவைப் பார்த்து ஈர்ந்துபோன விஷயங்கள்தான் அதிகம் இருக்கும்.



மகனுக்கும் அப்பாவிற்குமான உறவு மிகவும் பொறுப்புணர்ச்சி கொண்டது. அதை சரியான பாதையில் கொண்டு செல்வது இருவருடைய கடமை. எனவே இருவரின் உறவை பலமாக்க இந்த விஷயங்களை கடைபிடியுங்கள்.


ஈடு இணையில்லா உறவு : ஒவ்வொரு மகனுக்கும் அவரின் அப்பாதான் முதல் ஹீரோ. குழந்தை பருவத்திலிருந்தே அப்பாவைப் பார்த்து ஈர்ந்துபோன விஷயங்கள்தான் அதிகம் இருக்கும். எனவே பாலின பாகுபாடின்மை,, பேச்சு , சிந்தனை, செயல், மரியாதை, வன்முறையின்மை இப்படி பல விஷயங்களிமேலும் வாசிக்க


விருப்பங்களுக்கு முன் நில்லுங்கள் : சிறுவனாக, இளைஞனாக இருக்கும் பட்சத்தில் சாகசமான அல்லது வேகம் நிறைந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். அப்படி அவர்களுக்கு பிடித்த சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்களும் துணை நில்லுங்கள். அதிவேகமான விஷயங்களுக்கு புரமேலும் வாசிக்க


நேரம் ஒதுக்குங்கள் : இருவரும் சேர்ந்து நண்பர்களைப் போல் ஊர் சுற்றுதல், அப்பா - மகன் விளையாட்டுகளில் ஈடுபடுதல் என நிறைய விஷயங்களை சேர்ந்தே செய்யுங்கள்.


கேளுங்கள் : முன் கூட்டியே வரையறை செய்யாமல் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். பேசுவதை கவனிக்கும் , கேட்கும், இசைந்து கொடுக்கும் முதல் ரசிகனாக அப்பா இருக்க வேண்டும்.


கவனியுங்கள் : உங்கள் மகனிற்கு எதில் ஆர்வம் அதிகம், எந்த விஷயத்தை எப்படி செய்கிறார், படிப்பு, விளையாட்டு அனைத்திலும் அவருடைய ஆர்வத்தை, ஈடுபாட்டை கவனியுங்கள். விருப்பு , வெறுப்புகளை கவனியுங்கள். அதற்கு ஏற்ப உங்கள் செயல்களை விதையுங்கள்.


எதையும் பேசுங்கள் : மகனிடம் எப்படி பேசுவது என தயக்கம் கொள்ளாமல் இளமைப் பருவத்தில் நீங்கள் எதிர்கொண்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுங்கள். செக்ஸ் , காதல் , நட்பு இப்படி அனைத்தையும் வெளிப்படையாக பேசி புரிதலை உருவாக்குங்கள்.


தோல்விகளையும் கற்றுக்கொடுங்கள் : உங்கள் மகிழ்ச்சியை மட்டும் காட்டாதீர்கள். அழுகை , தோல்வி, கோபம், ஆளுமை, நடத்தை என அனைத்தையும் உங்களுடன் வைத்துக்கொண்டு காட்டுங்கள். வெளிப்படுத்துங்கள்.