இந்தியாவின் முதல் மூன்று சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீ சிமென்ட் நிறுவனம். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார் எழுந்தது.


அதைத் தொடர்ந்து, ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ராஜஸ்தானில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக சோதனை தொடர்ந்த நிலையில், போலி ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




மேலும், இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,200-1,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், போலி ஒப்பந்தங்களால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் முலம் ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ரூ.23,000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு புகார்; 60 இடங்கள்... பிரபல தோல் தொழிற்சாலைக் குழுமங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை