பிஸ்கட்டில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பு போன்ற அமிலங்கள் பிஸ்கட் தயாரிப்பின் போது எண்ணெய் மற்றும் டால்டாவை அதிகப்படியாக சேர்க்கும்போது உருவாகிறது.
ஆனால் அவற்றை பெரும்பாலான நிறுவனங்கள் செய்வது கிடையாது. இந்த அமிலங்களின் இருப்பு தெரியாததால் அதிகம் சாப்பிடும்போது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து இதயநோய் பிரச்சனை உருவாகிறது. சர்க்கரை நோயும் உண்டாகின்றன.
குழந்தைகள் இன்றளவில் 4 முதல் 5 பிஸ்கட் பாக்கெட்டுகளை சாப்பிட்டு வயிறு நிறைந்துவிட்டதாக கூறுகின்றனர். பிஸ்கட்டில் இருக்கும் ரசாயனங்களே இதற்கு காரணமாக அமைகிறது. அதேபோல பிஸ்கட் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும்.
வாரத்திற்கு ஒருமுறை பிஸ்கட் சாப்பிடுவது பிரச்சனை இல்லை என்றாலும் தினமும் அதனை சாப்பிடக்கூடாது. விளம்பரங்களில் வருவதைப் போல பாலுக்கு மாற்றாக பிஸ்கட் சாப்பிடலாம் என்று எண்ணம் இல்லாமல் பாலை தேர்வு செய்வது சாலச்சிறந்தது.
