மூக வலைத்தளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் அதற்காக பல செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல, பலர் டெலிகிராம் பயன்படுத்துகின்றன. மேலும் பயனர்களின் வசதிக்காக டெலிகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல டெலிகிராமில் ஸ்டோரி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இது குறித்து அந்த நிறுவனர் பவெல் துரோவ் வெளியிட்ட அறிவிப்பின் படி, தற்போது டெலிகிராமில் ஸ்டோரி வைக்கும் வசதிக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். அதன் பின் மற்ற செயலிகளை போல தங்களின் ஸ்டோரியை யாரெல்லாம் பார்க்கலாம் என பயனர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.