விஜய் மாமா.. சிகரெட் எல்லாம் பிடிக்க கூடாது. தப்பு வாயில வந்து பெரிசாயி நீட்டா வந்து ரத்தம் வரும் வாயில.. சாப்பிடக்கூட முடியாது என்று அட்வைஸ் பண்ணி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலும் வெளியிடப்பட்டது. இரண்டுமே விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குழந்தை ஒன்று விஜய் மாமா சிகரெட்லாம் பிடிக்க கூடாது தப்பு என்று அறிவுரை வழங்கி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அந்த சிறுவன், பின்னால சிங்கம் அதுக்கும் பின்னால நெருப்பு, அதுக்கு முன்னாடி விஜய்யி.. வாயில ஒரு சிகரெட்டு.. துப்பாக்கி அதுல புகை.. ஹேப்பி பர்த் டே விஜய் மாமா.. சிகரெட் எல்லாம் பிடிக்க கூடாது. தப்பு வாயில வந்து பெரிசாயி நீட்டா வந்து ரத்தம் வரும் வாயில.. சாப்பிடக்கூட முடியாது என்று அட்வைஸ் பண்ணி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ் பண்ணினார்.
புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால் தற்போது நடிகருக்கு சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் என மாணவர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார் என்று விமர்சத்து வருகிறார்.
முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆக்ரோஷமாக நின்ற விஜய்யின் பின்னால் நின்ற ஓநாய் நின்று கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. முன்னதாக இந்தப்படத்தில் விஜயுடன் சிங்கம் ஒன்று நடிப்பதாகவும், அதன் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக பெருந்தொகை செலவழிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது.
இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு முன்னதாக விஜயின் ‘பீஸ்ட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்ததாகவும் கூறப்பட்டது
