காலையில் நமது நாளை துவங்கவும், மதிய வேளையில் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், மாலையில் நாம் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் பலருக்கு காபி தேவைப்படுகிறது.
காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே ஓடும் என்ற அளவுக்கு பலரது மனநிலை இருக்கிறது. அந்த அளவுக்கு பலர் காபி மீது அதிக பிரியத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது, நமது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.
எனினும், காபி குடிப்பதால் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. காபி அதிகமாக குடிப்பதால் பதட்டம், தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, வேகமான இதயத்துடிப்பு மற்றும் காபிக்கு அடிமையாதல் உணர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகிறோம். மேலும் வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை அதிகரித்து நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே, ஒருவேளை நீங்கள் காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விடலாம் என முடிவு செய்தால் உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தலைவலி, தூக்கமின்மை, குமட்டல், எரிச்சல் போன்றவை உண்டாகலாம். ஆனால் இதனுடன் உங்களுக்கு பல நன்மைகளும் கிடைக்கப் போகிறது. அவை என்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
தூக்கம் மேம்படும்: காபி குடிப்பது உங்கள் மூளை மற்றும் நரம்பு அமைப்பின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது. இதனால் நீங்கள் எப்போதும் ஆக்டிவாக இருப்பீர்கள். காபி குடித்த அடுத்த ஆறு மணி நேரத்திற்கு பிறகு கூட நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். எனவே காபி குடிப்பதை தவிர்ப்பது உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
