Soaked Cashew Benefits In Tamil: நட்ஸ்களில் முந்திரி நிறைய பேர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. முந்திரி உருவத்தில் சிறிய அளவில் இருந்தாலும், அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இந்தியாவில் செய்யப்படும் பெரும்பாலான இனிப்புக்களில் முந்திரி சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

இது தவிர முந்திரி பல்வேறு சமையல்களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. பல சமையலில் முந்திரி அழகிற்காக மேலே தூவப்படுகிறது. இப்படிப்பட்ட முந்திரியை பலர் வெறுமனே சாப்பிடுவதுண்டு. ஆனால் முந்திரியை அப்படியே சாப்பிடுவதை விட, அதை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறலாம்.

அதுவும் தினமும் நீரில் ஊற வைத்த 10 முந்திரியை உட்கொண்டு வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கீழே முந்திரியை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. இதய நோயைத் தடுக்கும்

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே முந்திரியை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் முந்திரியில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதுவும் முந்திரியை ஊற வைத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

2. புற்றுநோயைத் தடுக்கும்

தினமும் முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஒரு முக்கியமான நன்மை, அது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். அதுவும் முந்திரியை ஊற வைக்கும் போது, அதில் உள்ள ப்ரோஅந்தோசையனிடின் என்னம் ஒரு வகையான ஃப்ளேவோனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வரக்கூடாதெனில், முந்திரியை தினமும் சாப்பிடுங்கள்.

3. எடை இழப்புக்கு உதவும்

பலரும் முந்திரி உடல் எடையை அதிகரிக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முந்திரியின் நல்ல கொழுப்புக்கள் உள்ளன. இந்த கொழுப்புகள் உடலில் நல்ல கொலஸ்ட்ராவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. முந்திரியானது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்கிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

4. பொலிவான சருமம்

முந்திரியில் காப்பர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இசை சருமத்தை பொலிவோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. நீங்கள் உங்கள் சரும அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்பினால், ஊற வைத்த முந்திரியை தினமும் சாப்பிடுங்கள்.

5. குடலுக்கு நல்லது

தினமும் நீரில் ஊற வைத்த முந்திரியை உட்கொள்ளும் போது, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், முந்திரியை ஊற வைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

6. கண்களுக்கு நல்லது

முந்திரியில் லுடின் அதிகளவில் உள்ளன மற்றும் இதில் பிற அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கண்கள் சேதமடைவதைத் தடுத்து, கண்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. எனவே பார்வை பிரச்சனைகள் வரக்கூடாதெனில், ஊற வைத்த முந்திரியை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

7. நரம்புகளுக்கு நல்லது

உடலில் மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக இச்சத்து குறைபாடு நரம்புகள் மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை பாதிப்பதைத் தவிர, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால் நீரில் ஊற வைத்த முந்திரியை தினமும் உட்கொண்டு வரும் போது, உடலுக்கு போதுமான மக்னீசியம் கிடைப்பதோடு, ஒற்றைத் தலைவலி மற்றும் உடல் வலி போன்றவையும் தடுக்கப்படும்.

8. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

முந்திரியில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதை உட்கொள்ளும் போது, உடலின் மெட்டபாலிசம் வலிமையாக இருக்கும். அதோடு, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போதுமான அளவில் உள்ள மற்றும் பல்வேறு வகையான நொதிகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள உதவி புரிகின்றன.