Mutton Benefits In Tamil: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அசைவ பிரியரா? அப்படியானால் உங்கள் உணவில் ஆட்டுக்கறி/மட்டனை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
நிறைய பேர் ஆட்டுக்கறி/மட்டன் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று நினைத்து, மட்டன் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் மட்டனை உணவில் சேர்ப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண முடியும் .
ஏனெனில் ஆட்டுக்கறியில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், செலினியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இது தவிர மட்டனில் ஜிங்க், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், போன்றவையும் உள்ளன.
முக்கியமாக மற்ற அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு. எனவே ஆட்டுக்கறியை அடிக்கடி சாப்பிடாவிட்டாலும், வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது ஆட்டுக்கறியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. எடை இழப்பிற்கு உதவும்
நிறைய பேர் மட்டன் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மட்டன் ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். ஏனெனில் மட்டனில் புரோட்டீன்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
எனவே மட்டனை உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைய மட்டன் உதவுகிறது.
இது தவிர மட்டனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்க உதவுகிறது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் மட்டனை தங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
2. பாலியல் ஆரோக்கியம் மேம்படும்
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் என்று வரும் போது அதில் பாலியல் ஆரோக்கியமும் அடங்கும். ஒருவரது பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆட்டிறைச்சி பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சி புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருள் மட்டுமல்ல.
பல ஆய்வுகளில் மட்டன் ஆண் மற்றும் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. அதுவும் மட்டனில் உள்ள பி வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை பாலுணர்ச்சி அதிகரிப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், மட்டனை உணவில் வாரந்தோறும் சேர்த்து வாருங்கள்.
3. மூளையின் ஆரோக்கியம் மேம்படும்
ஆட்டிறைச்சி மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் மற்றும் இதில் ஒள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
ஆய்வுகளிலும் மட்டன் கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளித்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. எலும்புகளுக்கு நல்லது
மட்டனில் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றம் வலிமைக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே மட்டனை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
5. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோயாளிகளில் தங்கள் இரத்த சர்க்கரை அளவை உணவுகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக மட்டனை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. மட்டனில் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இவை உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் பருமனடைவதைத் தடுக்கிறது.
6. இரும்புச்சத்து அதிகம்
மனித உடலில் மிகவும் தேவையான ஒரு சத்து தான் இரும்புச்சத்து. உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை வரும் அபாயமும் குறையும். எனவே இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறை மட்டனை உணவில் சேர்த்து வாருங்கள்.
7. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
மட்டனில் ஜிங்க் அதிகம் உள்ளன. உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஜிங்க் சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள விரும்பினால், மட்டனை உங்களின் உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
