பிரபல யூடியூபர் இயக்கும் முதல் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றது.
தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில், கதாநாயகியை மையமாக கொண்ட கதையில், பிரபல யூடியூபர் டுயூட் விக்கியின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா, யூடியூபரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.