சென்னை: சாலைகளில் இருக்கும் போர்ட் ஒன்றை பற்றி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.
இந்தியா முழுக்க தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. பல புதிய பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டிலும் மாநில நெடுஞ்சாலைகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. இதனால் நெடுஞ்சாலைகள் பகுதிகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன.நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் மக்கள் பலருக்கும் சாலை விதிகள் குறித்த புரிதல் இல்லை. சாலை விதிகள் சரியாக தெரியாமல் அவர்கள் ரோடு ரோடாக பயணம் செய்கிறார்கள். இதனால் சாலைகளில் விபத்து ஏற்படுவதும் அதிகம் ஆகி உள்ளது.
முக்கியமாக நெடுஞ்சாலைகளில் செல்லும் போது வலது பக்கம் செல்லும் ரோடு என்பது வேகமாக செல்வதற்கான ரோடு ஆகும். அதாவது வலது பக்கம் வண்டியை வேகமாக செலுத்தும் நபர்கள் செல்ல வேண்டும்.இடது பக்கம் மெதுவாக செல்லும் நபர்கள் செல்ல வேண்டும். இதுதான் இரண்டு லேன்கள் கொண்ட ஒரு வழி பாதைகளில் சாலை விதிகள் ஆகும். ஆனால் இதை பலரும் பின்பற்றுவது இல்லை. இதனால் சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எச்சரிக்கை: இந்த நிலையில்தான் நெடுஞ்சாலைகளில் இருக்கும் போர்ட் ஒன்றை பற்றி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.
அதன்படி சாலை பகுதிகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால் அது நோ ஸ்டாப் குறியீடு ஆகும். அதாவது அந்த பகுதியில் வாகனத்தை மெதுவாக ஓட்ட கூடாது. நிறுத்த கூடாது. பார்க் செய்ய கூடாது. ஒரு நொடி கூட.. யாரையும் பிக் செய்ய கூட நிறுத்த கூடாது. வாகனத்தை ஓட்டியபடியே செல்ல வேண்டும்.அங்கே வாகனத்தை நிறுத்தினால் அதற்கு கடுமையாக தண்டனை வழங்கப்படும்.பொதுவாக இது போன்ற சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்லும். அங்கே திடீரென வாகனத்தை நிறுத்தினால் அது விபத்திற்கு வழி வகுக்கும். பின்னால் வரும் வாகனங்கள் முன்னால் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இதை தடுக்கவே வேகமாக செல்லும் சாலைகளில் இந்த குறியீடு இருக்கும். இந்த குறையீட்டை பார்த்தால் உடனே அந்த சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும். பொதுவாக தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில்தான் இந்த குறியீடு இருக்கும். வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இருக்க கூடாது. அந்த இடையூறு காரணமாக விபத்து ஏற்பட கூடாது என்பதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் மக்கள் பலருக்கும் சாலை விதிகள் குறித்த புரிதல் இல்லை. சாலை விதிகள் சரியாக தெரியாமல் அவர்கள் ரோடு ரோடாக பயணம் செய்கிறார்கள். இதனால் சாலைகளில் விபத்து ஏற்படுவதும் அதிகம் ஆகி உள்ளது. பலர் தேவையின்றி சாலைகளில் இதை பார்த்துவிட்டு நிற்பதால் விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த சாலை விதி குறித்த விளக்கம் மத்திய அரசு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
